
கரூர்
மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலியானார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பூலாங்குடியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 27). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக காங்கேயம் சென்று கொண்டிருந்தார். மாயனூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (40) என்பவர் ஓட்டி வந்த அரசு பஸ், எதிர்பாராத விதமாக பாண்டியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாண்டியன் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பாண்டியன் மனைவி மைதிலி கொடுத்த புகாரின்பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.