< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு கூவத்தூர் அருகே காரின் மீது அரசு பேருந்து மோதி விபத்து - 5 பேர் காயம்
மாநில செய்திகள்

செங்கல்பட்டு கூவத்தூர் அருகே காரின் மீது அரசு பேருந்து மோதி விபத்து - 5 பேர் காயம்

தினத்தந்தி
|
27 Jan 2023 5:40 PM IST

விபத்து காரணமாக கூவத்தூர் ஈ.சி.ஆர். சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு,

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த புதுச்சேரி அரசு பேருந்து ஒன்று, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் வழியாக சென்று கொண்டிருந்த போது, எதிர்திசையில் அதிவேகத்தில் வந்த காருடன் மோதியது.

இந்த விபத்தில் கார் சாலையோரம் கவிழ்ந்து, அதில் பயணம் செய்த 3 பேர் படுகாயமடைந்தனர். மேலும் காரின் பின்னால் வந்த ஷேர் ஆட்டோவும் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கியதால் அதில் இருந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

அதே சமயம் பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இருப்பினும் அதில் பயணம் செய்த 25 பயணிகள் காயமின்றி தப்பினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கூவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்த 5 பேரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக கூவத்தூர் ஈ.சி.ஆர். சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் செய்திகள்