திருவண்ணாமலை
கார் மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்
|கார் மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
போளூர்
கார் மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் விருப்டங்கால் கிராமத்தை சேர்ந்த 11 பேர் பவுர்ணமியைெயாட்டி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு சென்றனர். கிரிவலம் முடிந்தபின்னர் கோவில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு வேலூரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். இவர்களது கார் போளூர் நற்குன்றுமலை அருகே வந்த கொண்டிருந்தது. அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் போளூருக்குள் வந்து விட்டு திருவண்ணாமலை ரோட்டில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ஆந்திர பக்தர்கள் வந்த கார் மீது மோதியது.
இதில் காரில் வந்தவர்களில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.