< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
மின்கம்பத்தில் அரசு பஸ் மோதல்
|24 Sept 2023 12:15 AM IST
கன்னியாகுமரியில் மின்கம்பத்தில் அரசு பஸ் மோதல் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
கன்னியாகுமரி புதிய பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ் 20 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. இந்த பஸ் கோவளம் சாலையில் திரும்பிய போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. உடனே பயணிகள் அதிர்ச்சி அடைந்ததோடு பதற்றத்துடன் பஸ்சில் இருந்து முண்டியடித்தபடி கீழே இறங்கினர்.
மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் மின்சார ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.