< Back
மாநில செய்திகள்
4 நாட்கள் தொடர் பணியால்  பஸ்நிலையத்தில் அரசுபஸ்சை நிறுத்தி விட்டு சென்ற டிரைவர்
நாமக்கல்
மாநில செய்திகள்

4 நாட்கள் தொடர் பணியால் பஸ்நிலையத்தில் அரசுபஸ்சை நிறுத்தி விட்டு சென்ற டிரைவர்

தினத்தந்தி
|
5 Dec 2022 12:15 AM IST

நாமக்கல் பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை நிறுத்திவிட்டு சென்ற டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.

டவுன் பஸ்

நாமக்கல் பஸ் நிலையத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் நகர்பகுதி மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து, எருமப்பட்டி, பவித்திரம் வழியாக வேலம்பட்டிக்கு '10 சி' என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று மதியம் 12 மணிக்கு புறப்பட இருந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்து இருந்தனர்.

கண்டக்டர் ராஜாராம், பயணிகளிடம் உரிய கட்டணத்துக்கு பயணசீட்டு வழங்கி கொண்டு இருந்தார். அப்போது திடீரென டிரைவர் மணிவண்ணன் தொடர்ந்து, 4 நாட்கள் பஸ்சை இயக்குவதால் உடல்நிலை சரியில்லை. அதனால் பஸ்சை இயக்கமாட்டேன் என கூறி பஸ்சில் இருந்து இறங்கி சென்று விட்டார். இதனால் கண்டக்டர் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போக்குவரத்து பணிமனை அலுவலர்களுக்கு கண்டக்டர் ராஜாராம் தகவல் தெரிவித்தார்.

மாற்று டிரைவர்

இதையடுத்து செவிந்திப்பட்டிக்கு செல்லும் டிரைவர் சரவணகுமாரை மாற்று டிரைவராக அனுப்பி வேலம்பட்டிக்கு பஸ் இயக்கப்பட்டது. ஒரு மணி நேரமாக காத்திருந்த பயணிகள், ஒரு வழியாக பஸ் இயக்கப்பட்டதால் நிம்மதி அடைந்தனர். இருப்பினும் இச்சம்பவம் சிறிதும் நேரம் பஸ்நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து போக்குவரத்து பணிமனை அலுவலர்கள் கூறும்போது, முகூர்த்தநாள் என்பதால் பலர் விடுமுறையில் சென்று விட்டனர். அதனால் டிரைவர் மணிவண்ணனுக்கு மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை. தற்போது மாற்று டிரைவர் ஏற்பாடு செய்து பஸ் இயக்கப்பட்டு விட்டது என்றனர்.

மேலும் செய்திகள்