தஞ்சாவூர்
ரூ.7.15 கோடியில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்கள்
|அம்மாப்பேட்டை, பாபநாசம் ஒன்றியங்களில் ரூ.7.15 கோடியில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
மெலட்டூர்:
திறப்பு விழா
தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம் கத்திரி நத்தம் ஊராட்சியில் 2 அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும் கலைஞர் கூட்ட அரங்கம், ராராமுத்திரகோட்டை ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிட நல்லவன்னியன்குடிகாடு ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம், பொது வினியோக கட்டிடம், சாலியமங்கலம் மற்றும் மெலட்டூரில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்கள், திருக்கருகாவூர், வடக்குமாங்குடி, கோவத்தகுடி உள்பட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் கலெக்டர் தீபக்ஜேக்கப், எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், சண்முகம், அரசு கொறடா கோவி. செழியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ. கலைச்செல்வன், துணைத்தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், மெலட்டூர் பேரூராட்சி தலைவர் இலக்கியா பட்டாபிராமன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வனமூர்த்தி, சோழன், கலைச்செல்வி கனகராஜ், சக்தி சிவக்குமார், துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாபநாசம் ஒன்றியம்
இதேபோல் பாபநாசம் ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 5 புதிய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். விழாவில் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் வரவேற்றார்.இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நாசர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.