< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
சிக்கன் கடையில் மதுவிற்றவர் சிக்கினார்
|12 Sept 2023 12:30 AM IST
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலக்கோடு அருகே கடமடை கிராமத்தில் உள்ள சிக்கன் கடையில் மதுபானங்களை விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் வேடியப்பன் (வயது 24) என்பதும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்த பாலக்கோடு போலீசார் அவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.