< Back
மாநில செய்திகள்
சட்டக்கல்லூரி மாணவர் கொலை வழக்கில்  கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நாமக்கல்
மாநில செய்திகள்

சட்டக்கல்லூரி மாணவர் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
29 Nov 2022 12:02 AM IST

நாமக்கல்லில் சட்டக் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சட்டக் கல்லூரி மாணவர் கொலை

நாமக்கல் என்.கொசவம்பட்டி வ.உ.சி நகரை சேர்ந்தவர் ஜீவா. இவருடைய மகன் சங்கீத்குமார் (வயது 21). இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

தீபாவளி விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்த சங்கீத்குமார், கடந்த மாதம் 23-ந் தேதி கொசவம்பட்டி சுடுகாடு அருகே நண்பர் பிரவீன் குமார் என்பவருடன் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் உருட்டு கட்டையால் சங்கீத்குமாரை தாக்கி கொலை செய்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீசார் அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்கிற அலெக்சாண்டர் (35), மவுலீஸ்வரன் (23) உள்பட 5 பேரை கைது செய்தனர். பின்னர் 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அலெக்சாண்டர் மற்றும் மவுலீஸ்வரன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் ஸ்ரேயா சிங் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்