< Back
மாநில செய்திகள்
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்-மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
கரூர்
மாநில செய்திகள்

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்-மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

தினத்தந்தி
|
17 May 2023 12:20 AM IST

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

14 பேர் பலி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குண்டர் தடுப்பு சட்டம்

இந்தநிலையில் கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள், கள் இறக்கி விற்பனை செய்பவர்கள், வெளிமாநில மது பாட்டில்களை வாங்கி விற்பனை செய்பவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கலப்பட மதுபானங்களை தயார் செய்பவர்கள் பற்றிய தகவல்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு 9498100780, 04324-296299 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கலப்பட மதுபானங்களை தயார் செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்