< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 3,640 டன் ரேஷன் அரிசி வந்தது
|22 May 2022 9:29 PM IST
நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 3,640 டன் ரேஷன் அரிசி வந்தது
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் வாங்கி வரப்படுகின்றன. அந்த வகையில் நேற்று 3,640 டன் ரேஷன் அரிசி தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 58 வேகன்களில் கொண்டு வரப்பட்டன.
இந்த அரிசி மூட்டைகள் 174 லாரிகளில் ஏற்றி நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.