தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி - அ.தி.மு.க. தீர்மானம்
|அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று கூடியது.
சென்னை,
அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று கூடியது.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செயற்குழு உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில், தி.மு.க. அரசு, மத்திய அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி மலரச்செய்வோம் எனவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் , மின் கட்டண உயர்வை திரும்ப பெறவும் , நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காத தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் , மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை அறிவிக்காதது, நிதி ஒதுக்காததை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.