< Back
மாநில செய்திகள்
தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்
தர்மபுரி
மாநில செய்திகள்

தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

தினத்தந்தி
|
14 Aug 2023 1:00 AM IST

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பொற்கிழி வழங்கினார்.

மூத்த நிர்வாகிகள் கவுரவிப்பு

கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க. 75-ம் ஆண்டு விழாவை முன்னிட்டும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கவுரவிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு பொற்கிழி வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி தர்மபுரி மாவட்டத்திலுள்ள கட்சியின் மூத்த நிர்வாகிகள் கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் கட்டமாக தர்மபுரியில் 3 முறை எம்.எல்.ஏ.வாகவும், 20 ஆண்டு மாவட்ட செயலாளராகவும் இருந்த ஆர்.சின்னசாமியின் இல்லத்திற்கு சென்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.பழனியப்பன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் கட்சி சார்பில் கடந்த காலங்களில் நடந்த நிகழ்ச்சிகளின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

கொடி ஏற்று விழா

தர்மபுரியில் நடந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் நாட்டார் மாது வரவேற்றார். முன்னாள் எம்.பி.க்கள் எம்.ஜி.சேகர், தாமரைச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் தர்மசெல்வன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர்கள் உமாசங்கர், ரேணுகா தேவி, ஆறுமுகம், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன், துணை அமைப்பாளர் வக்கீல் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள கட்சியின் மூத்த நிர்வாகிகள் 20 பேரின் இல்லத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நேரில் சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பொற்கிழி வழங்கினர். பின்னர் சோலைக்கொட்டாய், மாரியம்மன் கோவிலூர், சாமியாபுரம் கூட்ரோடு, நாச்சினாம்பட்டி, சூரப்பட்டி ஆகிய இடங்களில் தி.மு.க. கொடி ஏற்று விழா நடந்தது. இதில் அமைச்சர் கலந்து கொண்டு ஏற்றி வைத்து பேசினார்.

தீவிர களப்பணி

அப்போது அமைச்சர் பேசுகையில், தமிழகத்தில் நல்ல ஆட்சி நடத்தி வரும் தலைவர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இந்தியாவுக்கு முன் மாதிரி திட்டங்களை நிறைவேற்றி வரும் முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக கட்சி நிர்வாகிகள் அனைவரும் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில் விவசாய தொழிலாளர் அணி மாநில துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மேற்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஆ. மணி, ராஜகுமாரி, கிருஷ்ணகுமார், மாவட்ட பொருளாளர் முருகன், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவகுரு, ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், சரவணன், மாது, சவுந்தரராசு, முத்துக்குமார், நெப்போலியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (திங்கட்கிழமை) தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள மூத்த நிர்வாகிகளை அவர்களது இல்லம் தேடி சென்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பொற்கிழி வழங்கி கவுரவிக்க உள்ளார்.

மேலும் செய்திகள்