< Back
மாநில செய்திகள்
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.59 லட்சம் மதிப்பிலான தங்கம் - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
மாநில செய்திகள்

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.59 லட்சம் மதிப்பிலான தங்கம் - சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

தினத்தந்தி
|
27 Jun 2022 12:38 AM IST

சோதனையின் போது 3 பெண்கள் தங்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது கண்டறியப்பட்டது.

சென்னை,

சென்னை விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையில் இருந்து சென்னை வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது 3 பெண்கள் தங்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது கண்டறியப்பட்டது. அவர்களிடம் ஒரு கிலோ 275 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 59 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த 3 பெண்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்