< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சிங்கப்பூரில் இருந்து ரூ.37.59 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல் - திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
|18 Jun 2023 8:40 PM IST
திருச்சி விமான நிலையத்தில் 625 கிராம் தங்கத்தை கடத்தி வந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்டதை கவனித்த அதிகாரிகள், அந்த நபரின் உடமைகள் சோதித்தனர்.
அப்போது அந்த நபர், தகடு மற்றும் சங்கிலி வடிவில் 625 கிராம் எடை கொண்ட 37 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தபட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.