விழுப்புரம்
திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
|கருணாநிதி பிறந்தநாளில் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்
திண்டிவனம்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவான நேற்று முன்தினம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு கருணாநிதியின் பிறந்தநாள் அன்று திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த ஒரு பெண் மற்றும் 4 ஆண் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் மோதிரம், சத்துணவு பொருட்கள், பிரட், பழங்களையும், இவர்களை பெற்ற தாய்மார்களுக்கு பிரட், பழங்கள் ஆகியவற்றையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர், பொருளாளர் ரமணன், முன்னாள் எம்.எல்.ஏ. சேதுநாதன், கவுன்சிலர்கள் வக்கீல்பாபு, சந்திரன், கவுதமன், தலைமை மருத்துவர் சாந்தகுமாரி, கண் மருத்துவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவுன்சிலர் சந்திரன் செய்திருந்தார்.