< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தங்கம் விலை மீண்டும் உயர்வு... இன்றைய நிலவரம் என்ன?
|14 April 2024 12:44 PM IST
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை,
தங்கம் விலை கடந்த ஒரு வருட காலமாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது. இதற்கிடையே, கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை 'கிடுகிடு'வென அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்று நினைக்கத்தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் ரூ.600 அதிகரித்து ரூ.54,840க்கும், ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து ரூ.6,855-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே தங்கம் விலை உயர்ந்துவரும் நிலையில், தற்போது இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலால் மேற்கு ஆசிய நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.