< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை - ஒரு சவரன் 52 ஆயிரத்தை தொட்டது
|3 April 2024 9:49 AM IST
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.52 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்து வரலாறு காணாத அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.52 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.84-க்கு விற்பனை செய்யப்படுகிறது.