< Back
மாநில செய்திகள்
தங்கம் விலை மேலும் சரிவு... இன்றைய நிலவரம் என்ன?

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தங்கம் விலை மேலும் சரிவு... இன்றைய நிலவரம் என்ன?

தினத்தந்தி
|
18 Jan 2024 10:43 AM IST

வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

தங்கத்தின் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்