< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சம்: ஒரு பவுன் ரூ.48,720-க்கு விற்பனை - இல்லத்தரசிகள் அதிர்ச்சி
|7 March 2024 10:23 AM IST
தங்கம் விலை இன்று மேலும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னை,
தங்கம் விலை கடந்த ஓராண்டுக்கு மேலாக ஏற்ற, இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. இதில் பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்ததை பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதன் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.400-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 90-க்கும், ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.78.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.78 ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.