< Back
மாநில செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

தினத்தந்தி
|
9 May 2024 10:21 AM IST

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.120 குறைந்து ரூ.52,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,615-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.88.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்