< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - ரூ.46 ஆயிரத்தை தொட்டது ஒரு சவரன்..!
|4 May 2023 10:01 AM IST
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.46 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னை,
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.46 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.5,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.46 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக ஏப்ரல் 14-ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.45,760 ஆக இருந்ததே உச்சவிலையாக இருந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 2 நாட்களில் ரூ.1,080 வரை அதிகரித்துள்ளது.
மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.82.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மைய வங்கி கடன் வட்டியை 0.25 சதவீதமாக உயர்த்தியதே தங்கம் விலை உயர காரணம் என்று கூறப்படுகிறது.