< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு...!
|28 July 2023 11:06 AM IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
சென்னை,
இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,550-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.44,400-க்கு விற்பனையாகிறது.