< Back
மாநில செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு..!
மாநில செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு..!

தினத்தந்தி
|
30 Nov 2023 10:23 AM IST

தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.46 ஆயிரத்து 960-க்கு விற்பனை ஆனது. இதன் மூலம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ40 குறைந்து, ஒரு சவரன் ரூ.46,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து, ரூ.5,868-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.82.20-க்கும், ஒரு கிலோ ரூ.82 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்