< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
|24 Feb 2024 10:26 AM IST
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில் இன்று ரூ.200 அதிகரித்துள்ளது.
சென்னை,
தங்கம் விலை ஒரு நாள் உயர்வதும் மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.76.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.