< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தங்கம் விலை சற்று குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?
|25 April 2024 9:52 AM IST
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னை,
கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,710-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.86-க்கு விற்பனை செய்யப்படுகிறது.