< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
2 பவுன் நகை- ரூ.30 ஆயிரம் திருட்டு
|5 July 2023 3:39 AM IST
விவசாயி வீட்டின் கதவை உடைத்து 2 பவுன் நகை- ரூ.30 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வல்லம்;
தஞ்சை அருகே உள்ள மேலவெளி ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஞானஅருள்நேசன்(வயது47). விவசாயியான இவர் அவருடைய உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு குடும்பத்துடன் சென்று இருந்தார்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் ஞானஅருள்நேசனின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் இருந்து 2 பவுன் நகையும் மற்றும் ரூ.30 ஆயிரம் ஆகியவற்்றை திருடி சென்று விட்டனா். இது குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடய அறிவியல் நிபுணர்கள் திருட்டு நடந்த வீட்டுக்கு சென்று தடயங்களை சேகரித்தனர். இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.