< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சிவகாசி மாணவிக்கு தங்கப்பதக்கம்
|26 Aug 2022 12:11 AM IST
சிலம்பம் போட்டியில் சிவகாசி மாணவிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
சிவகாசி,
இந்திய இளைஞர் கூட்டமைப்பு சார்பில் பன்னாட்டு அளவிலான சிலம்பம்போட்டி நேபாளத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரியில் படிக்கும் வணிகவியல்துறை மாணவி அவ்வைமாரியம்மாள் கலந்து கொண்டு தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். சாதனை மாணவி அவ்வை மாரியம்மாளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் பழனீஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி, பேராசிரியர்கள், மாணவிகள் பாராட்டினர்.