< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 113 டிரைவர்களுக்கு தங்கப்பதக்கம்
|13 Jan 2024 5:05 AM IST
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று, மாநகராட்சியில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்த டிரைவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சென்னை,
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று, மாநகராட்சியில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்த டிரைவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் மேயர் பிரியா கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றிய 113 டிரைவர்களை கவுரவிக்கும் வகையில் சிறப்பு பரிசாக 4 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். குறிப்பாக, பணி காலத்தின் போது விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்கியது, பராமரிக்கும் தன்மை, எரிபொருள் சேமிப்பு, நன்னடத்தை மற்றும் தொடர் பணி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ரூ.34 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் ஆர்.லலிதா, இணை கமிஷனர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.