செங்கல்பட்டு
செங்கல்பட்டில் ஐ.டி. ஊழியர் வீட்டில் 62 பவுன் நகை திருட்டு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
|செங்கல்பட்டில் ஐ.டி. ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 62 பவுன் நகையை மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு,
திருட்டு
செங்கல்பட்டு, அனுமந்தபுத்தேரி, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஷயாம் (வயது 36). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
பின்னர், நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 62 பவுன் நகை, பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 8 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.46 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்த கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.
மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.