< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் பவானி அம்மன் கோவிலுக்கு தங்க முதலீட்டுப் பத்திரம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மாநில செய்திகள்

திருவள்ளூர் பவானி அம்மன் கோவிலுக்கு தங்க முதலீட்டுப் பத்திரம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தினத்தந்தி
|
11 Aug 2022 1:27 PM GMT

தங்க முதலீட்டுப் பத்திரத்தை பவானி அம்மன் கோவில் நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையில் போலி கற்கள், இதர உலோகங்கள் நீக்கப்பட்டு, பல மாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டன.

இவை புதிப்பிக்கப்பட்ட தங்க வைப்புத் திட்டத்தின் கீழ், 91 கிலோ 61 கிராம் எடையில் தூய தங்க கட்டிகளாக உருவாக்கப்பட்டன. இதற்கான தங்க முதலீட்டுப் பத்திரத்தை பவானி அம்மன் கோவில் நிர்வாகிகளிடம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் கிடைக்கப்பெறும் ஒரு கோடி ரூபாய் வட்டித் தொகை, கோவில் சார்ந்த திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்