தஞ்சாவூர்
பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு
|ஒரத்தநாடு அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஒரத்தநாடு, மே.28-
ஒரத்தநாடு அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கீழவன்னிப்பட்டு தேவ புரத்தைச் சேர்ந்தவர் சிவாஜி. இவர் சென்னையில் உள்ள அரசு மதுக்கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 37), மற்றும் குழந்தைகள் சென்னையில் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் சரஸ்வதி நேற்று முன்தினம் உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்காக தனது தந்தை மாரிமுத்து ஊரான கீழவன்னிப்பட்டு மேலத் தெருவுக்கு வந்தார்.இதன்பிறகு நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி தனது 2 குழந்தைகள் மற்றும் அவரது தாயார் ராஜசுலோச்சனா, தந்தை மாரிமுத்து ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த டவுசர் அணிந்த மர்ம நபர்கள் இருவர் சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
போலீஸ் வலைவீச்சு
இதில் கழுத்தில் காயமடைந்த சரஸ்வதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபர்களை தேடி வருகின்றனர்.