< Back
மாநில செய்திகள்
ஓய்வுபெற்ற அதிகாரி மனைவியிடம் தங்க சங்கிலி பறிப்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ஓய்வுபெற்ற அதிகாரி மனைவியிடம் தங்க சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
26 Feb 2023 12:15 AM IST

திருக்கோவிலூரில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற அதிகாரி மனைவியிடம் தங்க சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் காட்டாம் பூசாரி தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க அதிகாரி பாலசுப்பிரமணியன். இவரது மனைவி விஜயா(வயது 57). இவர் நேற்று முன் தினம் இரவு தனது வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டில் புகுந்த மர்ம நபர் விஜயாவின் கழுத்தில் கடந்த ¾ பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் திடுக்கிட்ட அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பறிபோன தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது மர்மநபர் பறித்து சென்ற தங்க சங்கிலி கவரிங், தாலி மட்டும் தங்கம் எனவும், மர்ம நபரை விரைவில் கண்டுபிடித்து விடுவதாகவும் தெரிவித்தனர். திருக்கோவிலூரில் போலீஸ் நிலையம் அருகில் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்