மதுரை
மின்வாரிய பெண் ஊழியரிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
|மின்வாரிய பெண் ஊழியரிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
வாடிப்பட்டி,
சமயநல்லூர் அருகே பரவை சத்தியமூர்த்தி நகர் முத்துராமலிங்க தெருவை சேர்ந்தவர் போஸ் மனைவி அமுதா (53). இவர் மதுரை அரசரடி மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று பாண்டிகோவிலுக்கு சென்று விட்டு பெரியார் பஸ் நிலையத்தில் பஸ் ஏறி பரவை பவர் ஹவுஸ் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சத்தியமூர்த்தி நகருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்புறமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அமுதாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் அமுதா அந்த சங்கிலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் மர்ம நபர்கள் 2¾ பவுனை பறித்துக் கொண்டு மாயமாக மறைந்தனர். இதில் எஞ்சிய 1¼ பவுன் அறுந்து கையில் சிக்கியது. இது சம்பந்தமாக சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.