< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பட்டப்பகலில் பானிபூரி கடைக்காரரின் மனைவியிடம் 7 சவரன் தங்க செயின் பறிப்பு
|15 Jun 2022 12:02 PM IST
செய்யார் அருகே பானிபூரி கடைக்காரரின் மனைவியிடம் செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே உள்ள மோரணம் கிராமம், சேட்டு நகர் பகுதியில் வசிப்பவர் மாரியப்பன் (வயது 38). இவர் ராந்தம் கூட்ரோட்டில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.
இவர் தனது மனைவி புவனேஸ்வரி உடன் செய்யாறு வந்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு திரும்ப வீட்டுக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் மாரியப்பனை வழிமடக்கி பேனா கத்தியை காட்டி அவரது மனைவி கழுத்தில் இருந்த 7 சவரன் நகையை பறித்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
இதுகுறித்து மாரியப்பன் மோரணம் காவல் நிலையத்தில் புகார் செய்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் தாலிச் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.