< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
மதுரை விமானநிலையத்தில் கடத்தல் தங்கம் சிக்கியது
|22 Jun 2022 1:25 AM IST
மதுரை விமானநிலையத்தில் கடத்தல் தங்கம் சிக்கியது
மதுரை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து நேற்று தனியார் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவர் மதுரையை சேர்ந்த சுப்புராஜ் என்பது தெரிய வந்தது. அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் சுத்தியலில் மறைத்து எடுத்து ரூ.10 லட்சத்து 23 ஆயிரத்து 504 மதிப்பிலான 198 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.