< Back
மாநில செய்திகள்
கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதியின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
மாநில செய்திகள்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதியின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

தினத்தந்தி
|
6 Jan 2023 12:55 PM IST

சுவாதியின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

புதுடெல்லி,

கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு, தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்ற 10 பேரும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர்.

அதேபோல, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் உள்ளிட்ட 5 பேர் சிறப்பு கோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா, வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது, வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார்.

இதனால் சுவாதி மீது தாமாக முன்வந்து ஐகோர்ட்டு மதுரைக் கிளை வழக்கு தொடர்ந்தது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சுவாதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுவாதி தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

மேலும் செய்திகள்