< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
கிருஷ்ணன் கோவிலில் கோகுலாஷ்டமி விழா
|19 Aug 2022 11:44 PM IST
கிருஷ்ணன் கோவிலில் கோகுலாஷ்டமி விழா நடந்தது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கிருஷ்ணன் கோவிலில் கோகுலாஷ்டமி விழா நடந்தது. முன்னதாக கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் (திருமஞ்சனம்), அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஜம்புகேஸ்வரர் கோவிலில் ஆடி மாத கார்த்திகையையொட்டி பால முருகனுக்கு அபிஷேகம் நடந்தது. தேய்பிறை அஷ்டமியையொட்டி தென்திசை நோக்கி அருள்பாலிக்கும் பைரவருக்கு அபிஷேகம் நடந்தது. இதேபோல் தற்காஸ் கிராமத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.