< Back
மாநில செய்திகள்
அண்ணாமலை செல்வது நடைபயணமே கிடையாது -  கே.எஸ்.அழகிரி கடும் விமர்சனம்
மாநில செய்திகள்

அண்ணாமலை செல்வது நடைபயணமே கிடையாது - கே.எஸ்.அழகிரி கடும் விமர்சனம்

தினத்தந்தி
|
6 Aug 2023 6:54 PM IST

அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணத்தால், அவர்களது கட்சியிலேயே எதுவும் ஏற்படாது கே.எஸ்.அழகிரி என தெரிவித்துள்ளார்

சென்னை,

அண்ணாமலை செல்வது நடைபயணமே கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ,

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்றதை பாதயாத்திரை என்றே சொல்லக்கூடாது. அவர் சொகுசு காரில் பயணம் செய்கிறார். ஒரு ஊர் வந்தவுடன் இறங்கி அங்கு நடக்கிறார். வீட்டில் நடந்தால், அதைக்கூட பாதயாத்திரை என்று கூறுவீர்களா? இதற்கு பெயரெல்லாம் நடைபயணம் இல்லை.

அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த நடைபயணத்தால், அவர்களது கட்சியிலேயே எதுவும் ஏற்படாது. அது தமிழகத்திலும் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது. என தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்