< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"படிப்பு, வேலைக்காக அரசின் நல வாரியம் மூலம் வெளிநாடு செல்வதே பாதுகாப்பு" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
|16 Sept 2022 11:59 PM IST
வெளிநாடு வாழ் தமிழர்களின் பாதுகாப்புக்காக அரசு சார்பில் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் முருகம்பாக்கம் பகுதியில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முறையாக பதிவு செய்துவிட்டு செல்வது மிக முக்கியம் என்று கூறினார்.
மேலும் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாதுகாப்புக்காக அரசு சார்பில் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், படிப்பு அல்லது வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், தமிழக அரசின் நல வாரியம் மூலமாக சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.