< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
100 அடி ஆழத்திலிருந்து எழுந்த அம்மன்... அத்திவரதரைப் போல் ஒரு அம்பாள் தரிசனம்
|9 Jun 2022 7:12 PM IST
அத்திவரதரைப் போல கடலூர் அருகே தண்ணீரில் இருந்து வெளியே வந்த செல்லியம்மனை கிராம மக்கள் வழிபட்டுச் சென்றனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் மருதூர் கிராமத்தில் புகழ்பெற்ற செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவிற்கு சுமார் 100 அடி ஆழத்தில் உள்ள கிணற்று நீரில் இருந்து ஆண்டுக்கு ஒரு முறை அம்மன் மேலே எடுத்து வரப்பட்டு திருவிழா கோலாகலமாக நடத்தப்படும்.
அந்த வகையில் திருவிழாவை முன்னிட்டு கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட அம்மனை மரபுப்படி மங்கள துணியால் யாரும் காணாதபடி போர்த்தி பல்லக்கில் எடுத்து வந்தனர். தொடர்ந்து தேரில் வலம் வந்த அம்மனை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
தொடர்ந்து விழா முடிந்த பின்பு மீண்டும் கிணற்றுக்குள் செல்லியம்மனை மங்கள் வாத்தியங்கள் முழங்க கிராம மக்கள் இறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.