கள்ளக்குறிச்சி
பள்ளம் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை
|பந்தல் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழாவின்போது தீர்த்தவாரியில் கலந்து கொள்ளும் சாமிகள் இளைப்பாற பந்தல் அமைக்கும் பணி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பாலாஜிபூபதி மற்றும் மணலூர்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதிஜெய்கணேஷ் மற்றும் விழா குழுவினர் முன்னிலையில் பந்தக்கால் நடும் பணி பூஜையுடன் நடைபெற்றது. பூஜை முடிந்த பின் பொக்லைன் எந்திரம் மூலம் விழா நடைபெறும் இடத்தை சமன் செய்யும்பணி நடைபெற்றது. பந்தல் அமைக்கும் பணிக்காக தொழிலாளர்கள் ஆற்றில் பள்ளம் தோண்டியபோது சுமார் 2 அடி உயரம் உள்ள உலோகத்திலான அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது எந்த வகையான உலோகம் என்று தெரியவில்லை? பின்னர் அந்த அம்மன் சிலை திருக்கோவிலூர் தாசில்தார் கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து தாசில்தார் கண்ணன் கூறும்போது, இந்த சிலை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து பின்னர் அது குறித்தான ஆய்வு முடித்த பின் கருவூலத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.