செங்கல்பட்டு
உத்திரமேரூர் அருகே கிணற்றில் இருந்து அம்மன் சிலை கண்டெடுப்பு
|உத்திரமேரூர் அருகே கிணற்றில் இருந்து அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.
கிணறு தூர் வாரும் பணி
உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டி கிராமத்திற்கு சொந்தமான ஏரியின் நடுவே கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்று நீரை கிராம மக்கள் பயன்பாட்டுக்காக தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தூர் வாரும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் வழக்கம் போல நேற்றும் தூர் வாரும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அம்மன் சிலை
அப்போது கிணற்றுக்குள் இருந்து 3 அடி உயரம் கொண்ட அம்மன் கற்சிலை துணி சுற்றிய நிலையில் தென்பட்டது. இந்த சிலையை மீட்டு பார்த்தபோது இந்த அம்மன் சிலையானது அமர்ந்த நிலையில் காட்சியளித்தது.
மேலும் கற்சிலையில் அணிகலன்கள் பொருத்தப்பட்டது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அம்மன் சிலை மீட்டது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் ஏரியில் ஒன்று கூடி அம்மனுக்கு மஞ்சள் சேலை உடுத்தி குங்குமம் வைத்து வழிபாடு நடத்தினர்.
இது குறித்து வருவாய் துறை அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர் அம்மன் சிலையை மீட்டு கொண்டு சென்றனர்.