< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
கொல்லங்குடி கோவிலில் புதுச்சேரி முதல்-மந்திரி சாமி தரிசனம்
|7 Sept 2022 11:26 PM IST
கொல்லங்குடி கோவிலில் புதுச்சேரி முதல்-மந்திரி சாமி தரிசனம் செய்தார்.
காளையார்கோவில்,
காளையார்கோவில் அருகே உள்ளது கொல்லங்குடி. இங்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய் வார்கள். இந்த கோவிலுக்கு புதுச்சேரி முதல்-மந்திரி ெரங்கசாமி காரில் நேற்று மாலை 5 மணிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்கு சென்ற அவர் அம்பாள் மற்றும் சுவாமியை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து மீண்டும் காரில் மதுரை புறப்பட்டு சென்றார்.