< Back
மாநில செய்திகள்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
மாநில செய்திகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தினத்தந்தி
|
21 Jun 2023 7:55 PM IST

உளுந்தூர்பேட்டை சந்தையில் சுமார் 35 ஆயிரம் ஆடுகள் 3 மணி நேரத்தில் விற்பனையாகியுள்ளன.

கள்ளக்குறிச்சி,

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடுகளின் விற்பனை தற்போது களைகட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வாரச்சந்தைகளில் ஆடுகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் கூட்டம் அலைமோதி வருகிறது.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சந்தையில் இன்று சுமார் 35 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில், 3 மணி நேரத்தில் அவை விற்பனையாகியுள்ளன. அங்கு சுமார் 3 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் செய்திகள்