< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

ராணிப்பேட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தினத்தந்தி
|
24 Jun 2023 12:12 AM IST

பக்ரீத் பண்டிகையையொட்டி ராணிப்பேட்டை சந்தையில் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

ஆட்டுச்சந்தை

ராணிப்பேட்டை ெரயில்வே ஸ்டேஷன் சாலையில் வெள்ளிக்கிழமைதோறும் ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. இதில் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருத்தணி மற்றும் ஆந்திராவின் பல பகுதிகளிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் தங்களது ஆடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர்.

வருகிற 29-ந் தேதியன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் நேற்று ராணிப்பேட்டையில் ஆட்டுச் சந்தை நடைபெற்றது. பக்ரீத் பண்டிகை நெருங்கி விட்டதால் நேற்று நடந்த சந்தையில் ஆடுகள் விற்பனை களைக்கட்டியது.

ரூ.2 கோடிக்கு விற்பனை

ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆடுகள் வாங்க குவிந்தனர். வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் ஆகியவற்றை விற்பனை செய்ய விவசாயிகள் சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து இறக்கினர்.

நேற்று நடந்த சந்தையில் சுமார் ரூ.2 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல் பக்ரீத் பண்டிகை என்பதால் ஆடுகளின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. ஒரு ஜோடி ஆடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானது.

மேலும் செய்திகள்