< Back
மாநில செய்திகள்
வாரச்சந்தையில் ரூ.30 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வாரச்சந்தையில் ரூ.30 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

தினத்தந்தி
|
9 July 2022 9:41 PM IST

வேடசந்தூர் அருகே, வாரச்சந்தையில் ரூ.30 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது.

வேடசந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகள், வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டியில் சனிக்கிழமைதோறும் நடைபெறும் வாரச்சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வந்தனர்.

பக்ரீத் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி ஆடுகளை வாங்குவதற்கு ஏராளமானோர் குவிந்தனர். குறிப்பாக கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. நேற்று ஒரே நாளில், ரூ.30 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்