< Back
மாநில செய்திகள்
உளுந்தூர்பேட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

உளுந்தூர்பேட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தினத்தந்தி
|
20 April 2023 12:15 AM IST

ரம்ஜான் பண்டிகையையொட்டி உளுந்தூர்பேட்டை சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று வாரச்சந்தை நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமானவிவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த ஆடுகளை விற்பனைக்காக வாகனங்களில் கொண்டு சென்றனர்.

இதில் திருச்சி, சேலம், மதுரை, தேனி, கம்பம், கடலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஆடுகளை போட்டி போட்டு வாங்கினர். தரத்திற்கு ஏற்ப ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது.

ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

இதன் மூலம் நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையின் போது முஸ்லிம்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவது வழக்கம். இதன் காரணமாக இந்த வாரச்சந்தையில் வழக்கத்தை விட அதிக அளவில் ஆடுகள் விற்பனையானது என்றார். ஆடுகள் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்