< Back
மாநில செய்திகள்
மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் செத்தன
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் செத்தன

தினத்தந்தி
|
27 Oct 2023 1:00 AM IST

கிருஷ்ணகிரி அருகே மர்ம விலங்கு கடித்ததில் 10 ஆடுகள் செத்தன.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே மர்ம விலங்கு கடித்ததில் 10 ஆடுகள் செத்தன.

ஆடுகள் செத்தன

கிருஷ்ணகிரி மாவட்டம் பெல்லாரம்பள்ளி அருகே உள்ள புதுபேயனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். விவசாயி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் 23 ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றவர், மீண்டும் வீட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்தார். இதையடுத்து நேற்று காலை பட்டியில் சென்று பார்த்தபோது 10 ஆடுகள் செத்து கிடந்தன. 5 ஆடுகள் காயங்களுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சேகர், வனத்துறை, கிருஷ்ணகிரி அணை போலீசாருக்கு தகவல் அளித்தார்.அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது:-

கண்காணிப்பு தீவிரம்

புதுபேயனப்பள்ளி அருகே சோக்காடி காப்புக்காடு அமைந்துள்ளது. இங்கிருந்து வெளியேறிய மர்ம விலங்கு கடித்ததில் ஆடுகள் இறந்துள்ளன. மேலும் ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த பட்டி, சிமெண்டு சாலையை ஓட்டி அமைக்கப்பட்டிருந்ததால், மர்ம விலங்கின் கால் தடம் தெரியவில்லை. தொடர்ந்து இப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் காயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்