< Back
மாநில செய்திகள்
சின்னசேலம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சின்னசேலம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

தினத்தந்தி
|
20 Oct 2022 6:45 PM GMT

தீபாவளி பண்டிகையையொட்டி சின்னசேலம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

சின்னசேலம்

சின்னசேலத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சந்தை நடைபெறுவது வழக்கம். 50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இ்ந்த சந்தையில் காய்கறிகள் மட்டுமின்றி மளிகை, ஆடைகள், கருவாடு, தேங்காய் நார் கயிறு, நூல் கயிறு போன்ற பொருட்களும், கறி சமைப்பதற்காக ஆடு, மாடு, கோழி போன்றவையும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு சின்னசேலம் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்கள் இ்ந்த சந்தையில் கூட்டம் களை கட்டும். கடந்த 4 வாரங்களாக புரட்டாசி மாதம் என்பதால் ஆடு, கோழிகளின் விற்பனை மந்தமாக இருந்தது. தற்போது புரட்டாசி மாதம் முடிந்துள்ள நிலையில் வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட இருப்பதால் நேற்றைய சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. சின்ன சேலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை விற்பனைக்காக அதிகாலையிலேயே சந்தைக்கு கொண்டு வந்தனர். உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த வியாபாரிகள் அவற்றை போட்டி போட்டு வாங்கி வாகனங்களில் கொண்டு சென்றனர். நேற்யை சந்தையில் 600-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானதாகவும், ஒரு ஆடு குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்வரை விற்பனையானதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்