< Back
மாநில செய்திகள்
ஆடுகள் திருடிய வழக்கு:    மேலும் 2 வாலிபர்கள் கைது
கடலூர்
மாநில செய்திகள்

ஆடுகள் திருடிய வழக்கு: மேலும் 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
10 Nov 2022 12:15 AM IST

ஆடுகள் திருடிய வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.


குமராட்சி,

குமராட்சி அருகே மேல வன்னியூர் கிராமம் பெரியவட்டம் பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை(வயது 48). தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் கட்டியிருந்த 3 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து, சாமிதுரை அளித்த புகாரின் பேரில் குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதேபோன்று, விளத்தூர் கிராமம் கலை வேந்தன் (45), என்பவரது கொட்டகையில் இருந்த 3 ஆடுகளும் திருடுபோனது. இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ம. கொளக்குடி பகுதியை சேர்ந்த பாலகுரு (25), டி. நெடுஞ்சேரி மணிகண்டன் (25) ஆகியோரை கைது செய்து, ஆடுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில், டி.நெடுஞ்சேரி பகுதியை சேர்ந்த சிபிராஜ் (21), வடம்மூர் விக்ரம்(23) ஆகியோரை இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்